விடியற்காலை வேளையிலே!

பூக்கோலம்

விடியற்காலை வேளையிலே
விதவிதமாய் கோலத்தையே

படிப்படியாய் பழகிக்கொள்ளு
பருவத்திலே கோமகளே

தேடிவரும் செல்வங்களே
தேடாமல் மிகவருமே

ஆடிப்பாடி அகமகிழ்ந்து
மாக்கோலம் வரைந்திடவே

மாறிவரும் உலகத்திலே
மாறாத பண்பதுவாம்

மாறிவிடும் அல்லல்களே
மறவாதே பரம்பரையாய்

பல்லுயிர்க்கும் உணவளித்த
பயனதுவே ஆகிடுமாம்

பல்லுயிரும் வாழுமிங்கே
பல்லாண்டு வாழ்த்தும் அம்மா

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

Visited 1 times, 1 visit(s) today