மண்ணுலகம் செல்லுலகமான காலச்சூழலில்
அன்யோன்யமான உறவுகளும் இன்று
அன்னியமாய்ப் போக
அன்னிய உறவுகளே அன்யோனமானது!
நல்லதைக் கெட்டதாக
கெட்டதை நல்லதாக
திரித்துக் காட்டும் ஊடகங்களே
முழு நேரத்தையும் ஆக்கிரமிக்கிறது!
விரலைத் தேய்த்துத் தேய்த்து
உயிர்ப்பில்லாத காட்சிகளில் உறவாடி
உன்னத நேரத்தையும் விரயமாக்கிடும் நிலை!
அறிவியலின் அதீத வளர்ச்சி, இற்றுப் போகும்
மனித சமுதாயத்திற்கு வித்திடுமோ? என்ற
அச்சத்தில் மனதில் உலவிடும் வினா ஒன்று!
நாம் ஆக்கப் பாதையில் செல்கிறோமா? இல்லை
அழிவுப் பாதையில் வீழ இருக்கிறோமா?
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!