Gundu

விளையாட்டின் பயன்கள்

பரபரப்பான உலகம் – வேகம் நிறைந்த வாழ்க்கை அமைப்பு – உழைப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. ஓய்வும் அவசியமே!

ஓய்வு என்றால் படுத்து உறங்குவதல்ல, செய்கின்ற வேலையை மாற்றிச் செய்வதும் விருப்பமானவர்களுடன் சேர்ந்து உறவாடுவதும் விளையாடிக்களிப்பதும் ஆகும்.

“உடலினை உறுதி செய்” என்று கூறிய பாரதியார் “ஓடி விளையாடு பாப்பா” என்றும் நமக்காக பாடி உள்ளார். சத்துணவு, உடற்பயிற்சி, மாலை நேர விளையாட்டுக்களினால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகின்றது.

விளையாட்டுக்களினால் குழுஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருவதுடன் உடலில் உள்ள கழிவு உப்புகள் வியர்வையாக வெளியேறும்.

அதிக வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல் வெப்பம் சீராகின்றது. வியர்வைச் சுரப்பிகள் நம் உடலின் ஓர் கூலகக் கருவியாகப் பயன்படுகின்றது. நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் ‘டாப்மைன்’ என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கின்றது.

கிராமங்களில் பொதுவாக விளையாடும் விளையாட்டுக்கள் பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், குலை குலையாய் முந்திரிக்காய், பரமபதம், நொண்டி, கண்ணாமூச்சி, தட்டாங்கல் மற்றும்  கபடி எனப் பல உள்ளன.

 


Comments

“விளையாட்டின் பயன்கள்” மீது ஒரு மறுமொழி

  1. Sanjay ponkamaraj

    Fantastic