விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!
நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!
தந்தை வழி சமூகம் கண்டு
தாய் வழி இன்பம் கொண்டோம்!
எந்தை வழி நான் வந்தேன் – என்
நிலமும் என் விளைச்சலும் அங்கே!
சத்தில்லா வித்துண்டோ முன்னோர் வாழ்வில்?
கத்திச் சொல்வோம்!
வித்தில்லா விளைச்சல் வேண்டாம் எங்களுக்கு!!
என் வம்சம் எங்களுக்கே! – உன்
வம்சம் எதற்கு இங்கே? – சிந்திப்பீர்!!
வித்தில்லா விளைச்சலும்
சத்தில்லா மகவும் வேண்டுமோ தமிழ் இனத்திற்கு?
சுகன்யா முத்துசாமி