பயிற்சி வெற்றி தரும்
பயிற்சிகள் பல பழுதடைந்தாலும்
முயற்சிகள் முற்றிக் கனியும் வரை காத்திரு
சில முயற்சிகள் வெற்றியைப் புறந்தள்ளி
பல தோல்விகள் தரலாம்- ஆனால்
நல்ல அனுபவத்தையும் நம்பிக்கையும்
ஒரு போதும் தர மறுத்ததில்லை….
பயிலுவதே பயிற்சி
பயிற்சியே முயற்சி
முயற்சியே வெற்றி
கற்கும் போதே வெற்றிப் படிகளை அறிந்து கொள்
வெற்றிப் படிகளைத் தொடர்ந்து செல்…
வெற்றிப் படிகளைத் தொடும் காலம் வரை காத்திரு
கனிகள் கனிவது போல் கனிவாகக் கற்றுக்கொள்
வெற்றி என்ற முற்றுப் புள்ளி உனைத் தொடரும்…
பயிற்சி செய்…
முயற்சி செய்…
வெற்றிகொள்…
நாயகனே!

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!