பாரினிலே யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும்
படுகுழியில் தள்ளாது இருக்கவும் வேண்டும்
பெருமைதானில் பீடு பெற நிற்றலும் வேண்டும்
பெயர் அதனை கெடுத்திடாத செய்கையும் வேண்டும்
குணமதனில் நிறையெனவே நிற்றலும் வேண்டும்
மணமகனின் மாறாத மனமும் வேண்டும்
கூற்றுதனில் பொய்யில்லா நிலையும் வேண்டும்
கூற்றவனை எதிர்த்திடவும் துணிவும் வேண்டும்
கற்றிடவே கற்பனையும் கொள்ளல் வேண்டும்
கற்பனையே கல்வியாகா நிலையும் வேண்டும்
குழந்தைமை மாறாத இளமை வேண்டும்
இளமையில் மாறாத மழலை வேண்டும்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!