ஹோமம் பலன்கள்

ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்

2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி

3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம்

4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி

5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்

6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி

7. பூசணிக்காய் – சத்ருநாசம்

8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி

9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி

10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி

11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)

12. நெல் பொரி – பயம் நீக்குதல்

13. சந்தனம் – ஞானானந்தகரம்

14. மஞ்சள் – வசீகரணம்

15. பசும்பால் – ஆயுள் விருத்தி

16. பசுந்தயிர் – புத்ர விருத்தி

17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி

18. நெய் – தனலாபம்

19. தேங்காய் – பதவி உயர்வு

20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி

21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்

22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்

23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.