அவளும் அழுதாள்!

அவள் அந்தக் கடையில் வேலை பார்ப்பவள். ஒரு நாள் மதிய வேளையில் கடைக்கு யாருமே வரவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுவேதா கடைக்குள் வந்து கையைத் தட்டிக் கொண்டு பணம் கேட்டாள்.

“ஏதாவது குடு கண்ணு”

“ இந்தாங்க அக்கா” என்று 5 ரூபாய் கொடுத்தாள்.

“ஒரே வெயிலா இருக்கு! கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போறேன் கண்ணு!”

“சரி அக்கா உட்காருங்க!”

சுவேதாவிடம் பேச அவளுக்கு ஆசை. சுவேதாவைப் பற்றி விசாரிக்க தொடங்கினாள்.

“இப்படி காசு வாங்குவதற்கு ஏதாவது வேலைக்கு போகலாமில்ல”

பேசிக் கொண்டிருக்கும் போதே சாலையில் பல திருநங்கைகள் பாடையில் யாரையோ தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சில பேர் கைகளில் செருப்பும் விளக்கமாறும் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து என்னவென்று அமுதா கேட்டாள்.

“எங்கள மாதிரி ஒரு திருநங்கை இறந்து போயிட்டாங்க போல. அவங்கள அடக்கம் பண்ண தான் எல்லா திருநங்கைகளும் சேர்ந்து தூக்கிட்டு போறாங்க”

“ஏன்? அவர்கள் கையில் செருப்பும் விளக்கமாரும் கொண்டு போறாங்க அக்கா”

“எங்க திருநங்கைகள் கூட்டத்தில் யாராவது இறந்து போயிட்டாங்கனா அவங்கள செருப்பாலையும் விளக்கமாத்தாலையும் அடிச்சு வழி அனுப்பி வைப்போம்!”

“ எதற்காக இப்படி செய்றீங்க?”

“இந்தப் பிறவியில நீ பட்ட அசிங்கமும் கஷ்டமும் துன்பமும் கொடுமைகளும் வலிகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் ஏக்கங்களும் ஏராளம். இனிமே இப்படி ஒரு பொறப்பு உனக்கு வரவே கூடாது.

இதைக் கேட்டு அவளும் அழுதாள். அவளின் கண்கள் கண்ணீர் குளங்கள் ஆகிப் போகின.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.