உற்றவர், ஊரார், நாட்டவர் உய்வுற,
அற்றவர், மற்றவர் அவலம் அகன்றிட,
மானுடம் காத்து மனிதம் மலர்ந்திட,
நம்பிக்கை, முயற்சி முனைந்து தழைத்திட,
வெற்றிப் பாதையின் திறவுகோல் ஏந்தி
ஒளிவெள்ளம் பாய்ச்சி வந்தது புத்தாண்டு!
மாற்றங்கள் காண்போம் மனத்தளவில்,
அன்பினைச் சேர்ப்போம் அகத்தளவில்,
ஆசைகள் வளர்ப்போம் அறவழி நடக்க,
இன்பமே நிலைக்க இசைபட வாழ்வோம்!
மாசறு நட்பு, ஏற்றிய ஏணி மறவோம் என்றும்,
வாழ்வோம், வளர்வோம், மகிழ்வோம் என்றும்,
நலமே புரிவோம், நலமே பெறுவோம்!.
சிராங்குடி த. மாரிமுத்து
மன்னார்குடி
94436 73155
மறுமொழி இடவும்