அனுமன்

Hanuman

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

 

கருப்பண்ணசாமி

karuppannasamy

வான்புகழும் வானவர் வையத்தோர் மகிழ்ந்திடவே

தேன் மதுர தெய்வீக திருவருளால் தெரிவிக்க அரி

வாள் ஓங்கிநிற்கும் கருப்பண்ணசாமியை

வணங்கியே வளம் பெறுவோம் நாம்!