பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்

சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே

செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே Continue reading “பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்”

உறவென்பதா இல்லை உயிரென்பதா

பச்சிளம் குழந்தை

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

 

கருவாக நிலைகொண்ட கதை சொல்லவா

கற்பூரம் மணம் கொண்டு காற்றோடு கலந்திங்கு

கண்ணிமைக்குள் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா Continue reading “உறவென்பதா இல்லை உயிரென்பதா”

என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”

பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு

காதல்

பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.

காதலன் முதலில் பாட, அதற்குக் காதலி பதில் சொல்லும் வகையில் அமைந்த இந்தக் கவிதை எல்லாக் காதலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை.

 

அம்மாடி உன் பார்வை பட்டா போதும்

ஆயுசு நூறு என்றே மாறிப் போகும்

சும்மாயில்ல மூத்தவங்க சொன்ன பேச்சும்

சுட்டுடத்தான் செய்யுதடி காதல் மூச்சும் Continue reading “பிப்ரவரி 14ல் செஞ்சு காட்டு”