அவர்கள் – கவிதை

ஒரு காலத்தில் 
அவன் அந்த தெருக்களில் 
நண்பர்கள் புடைசூழ 
நடந்து கொண்டிருந்தான் 

காற்றில் கரைந்த 
அந்த பேச்சுக்கள் 
இன்னும் மிச்சம் மீதி என்று 
ஏதோ அவன் காதில் 
ஒலித்துக் கொண்டிருந்தது 

Continue reading “அவர்கள் – கவிதை”

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

மாணவச் செல்வங்களே! நீங்கள் கல்வி கற்கிறீர்கள்.அதற்கு பெரிதும் துணை புரிவது யார்? உங்கள் தாயும் தந்தையும்!

மாதா, பிதா, குரு, தெய்வம் என வெகு காலம் முன்பே நம் முன்னோர்கள் மிகச் சரியாக வரிசைப்படுத்தியிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றே!

தாய் தந்தைக்குப் பிறகே மற்றவர்கள். எந்த நேரத்திலும், எக்காலத்திலும் உங்களை அரவணைத்துப் பாதுகாப்பவர்கள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள். உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

Continue reading “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!”

விடிவு  எப்பொழுது? – கவிதை

விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!

துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட

விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!

நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!

Continue reading “விடிவு  எப்பொழுது? – கவிதை”

வாழ்ந்தே தீருவேன் – கவிதை

காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்

காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்

காற்றடித்தால் சாயும் வாழையல்ல

Continue reading “வாழ்ந்தே தீருவேன் – கவிதை”