முள்ளில் ரோஜா – சிறுகதை

முள்ளில் ரோஜா

அந்த பிரபல சோப் கம்பெனி வாசலின் முன் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினான் விக்னேஷ்.

என்னைப் பார்த்ததும், “என்ன ரவி என்னாச்சு? லீவா இன்னிக்கு? வழக்கத்துக்கு மாறா இருக்கு? நீ லீவே போடமாட்டியே?”

“அஃப் கோர்ஸ். மனசு சரியில்லைப்பா” என்று, ஒருவித மனஇறுக்கத்துடன் யந்திரத்தனமாய் நான் பதிலளித்தேன்.

“என்னது மனசு சரியில்லையா? அப்படி என்ன நடந்தது? வா, காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என என்னை வலுக்கட்டாயமாகக் கம்பெனி கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.

Continue reading “முள்ளில் ரோஜா – சிறுகதை”

சுமைகளையே சுமப்பதில் இன்பம்

சுழலும் காற்றின் துகளாக

தொலைவினில் நானும் விழுந்தெழுந்தேன்

எழுந்த எந்தன் கால் வழியே

விலகும்புவியை நான் உணர்ந்தேன்

Continue reading “சுமைகளையே சுமப்பதில் இன்பம்”

பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை

பாலுவும் தயிர்சாதமும்

கடைசி மணி அடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல பள்ளியை விட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். ஒன்பதாவது படிக்கும் பாலு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் பொறுமையாக நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும் புத்தகப் பையை ஜன்னலோரம் வைத்துவிட்டு எதையோ சிந்தித்தபடி கதவின் அருகில் அமர்ந்தான். மதியம் பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

மதிய உணவு இடைவேளையில் பாலு நண்பர்களோடு சாப்பிடும்போது, ஒருவன் கேட்டான்.

Continue reading “பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை”

மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”