வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் – துளிப்பாக்கள்

வானம்

செல்லம்பாலாவின் துளிப்பாக்கள்:

நோகாமல் நோன்பு
கும்பிடவே முடியாது
காதல் Continue reading “வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் – துளிப்பாக்கள்”

அறிவு உயிர் காக்கும் – சிறுகதை

நரி

அறிவு உயிர் காக்கும் என்பது ஒரு நல்ல‌ சிறுகதை. நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை.

பூங்காவனம் என்ற காட்டிற்கு ராஜாவாக சிங்கம் ஒன்று இருந்தது. அது தனக்கு ஆலோசனை சொல்வதற்கு மூன்று மந்திரிகளை நியமிக்க எண்ணியது.

அதன்படி கரடி, குரங்கு, நரி ஆகியோரை மந்திரிகளாக நியமித்தது. Continue reading “அறிவு உயிர் காக்கும் – சிறுகதை”

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ’ என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம் ஆகும். Continue reading “எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ”

நாலு கோடி பாடல்கள்

நாலு கோடி பாடல்கள்

நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் – இது அரச கட்டளை.

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து இவ்வாறு ஆணையிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ அவைக்களப் புலவர்கள் திகைத்தனர்.

அப்போது அங்கே ஒளவையார் வந்தார்.  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார்.

உடனே அவர் அவைக்களப் புலவர்களைப் பார்த்து, “இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம்.” என்றார். Continue reading “நாலு கோடி பாடல்கள்”