இருமனம் திருமணம் – சிறுகதை

இந்து திருமணம்

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”

தமிழர் திருநாள்- கவிதை

போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே

தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்

அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே

Continue reading “தமிழர் திருநாள்- கவிதை”

பொங்கலோ பொங்கல் – கவிதை

பொங்கல்

பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்

Continue reading “பொங்கலோ பொங்கல் – கவிதை”

என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட

காடுகரை செழிச்சுக் கிடக்க

மாடு மேய்க்க போன எனக்கு

பசி எடுக்க வழியுமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை

Continue reading “என்னதான் மிச்சமிருக்கு?”