துண்டு பட்டுக் கிடந்த பாரத தேசத்தை ஒன்றாக்கிய பெருமை சர்தார் படேலைச் சேரும். அவருக்கு இரும்பு மனிதர் என்று பெயர். அவரது பயங்கரமான கண்களைக் கண்டே, பல அரசர்கள் அவர் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டனர் என்று சொல்லப்படுவதுண்டு. (மேலும்…)
Category: சமூகம்
-
ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?
நடந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
-
இனிப்பு சாப்பிடாதே!
ஒரு முறை ஒரு தாய் காந்திஜியிடம் வந்து தன் மகனைக் கூடுதல் இனிப்பு சாப்பிடாமலிருக்க அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.
காந்திஜியோ அவர்களை மறுநாள் வரும்படிக் கூறினார்; மறுநாள் அவர்கள் வந்தனர்.
(மேலும்…) -
மரங்கள் அவை வரங்கள்
எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.
அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது. (மேலும்…)
-
அழியும் பறவைகள்
சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.
சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.
ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.
நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. (மேலும்…)