இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.
தங்கத்தால் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க பஸ்ப லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.
ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே…… பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், கனகம் எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார். (மேலும்…)