மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?

மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா? என்ற இந்தக் கதை உங்களை யோசிக்க வைக்கும்.

ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதையை படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான். “தாத்தா, எப்பப்  பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே, இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?” என்றான்.

Continue reading “மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா?”

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

சாக்ரடீஸிடம் அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான். Continue reading “மாணவன் எப்படி இருக்க வேண்டும்?”

நம்பிக்கை ஒளி

நம்பிக்கை ஒளி

அன்று புதன்கிழமை. வாரத்தின் நடுநாள். ஆச்சர்யப்பட வேண்டாம். வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டுமே வேலைநாளாக உள்ளவர்களுக்கு புதன் கிழமை வாரத்தின் நடுநாள்தான். ஆதலால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.

அன்றைக்கு செங்கோட்டை ரயிலிலிருந்து மதுரை சந்திப்பில் இறங்கி வெளியே வந்து  பேருந்திற்காக காத்திருந்தேன். மாட்டுத்தாவணிக்குச் செல்லும் பேருந்து வந்தது.
Continue reading “நம்பிக்கை ஒளி”

என் கையை விடமாட்டிங்கப்பா

தந்தை மகள்

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.

தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”

மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”

“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.

அறிவும் பண்பும்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

அறிவும் பண்பும் இணைந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். அதையே திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

வைய‌த்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் ஒளி விளக்காக மிளிர்வது திருக்குறள். அடக்கம், அருள், அறிவு, அன்பு, ஊழ்வினை, ஊக்கம், ஒழுக்கம், நாண், பண்பு, பொறை ஆகிய பத்துவகை உடைமைகளைக் குறித்து விரித்துரைக்கின்றார் தெய்வப் புலவர். Continue reading “அறிவும் பண்பும்”