உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”

மாணவர் – புதுக்குறள்

அரசுப்பள்ளி

பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்

பருவம் உலகின் உருவம்

 

கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை

மாணவ பருவத்தின் முதலறை

 

வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்

புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”

புத்தியைப் பயன்படுத்து

புத்தியைப் பயன்படுத்து

புத்தியைப் பயன்படுத்து என்பது ஒரு நல்ல சிறுகதை. நம் பிரச்சினைகளை சமாளிக்க, நாம் எப்படிப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இக்கதை சொல்லிக் கொடுக்கும்.

கதிரும் சந்துருவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கதிர் அமைதியானவர். சந்துரு துடுக்குத்தனம் நிறைந்தவர்.

சந்துரு தனது வீட்டுத் தோட்டத்தில் கோழிகள் நிறைய வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வேலிகள் ஏதும் போடவில்லை.

ஆதலால் சந்துருவின் கோழிகள் கதிர் வீட்டிற்குச் சென்று, அருகே இருந்த‌ செடி, கொடிகளை எல்லாம் கிண்டிக் கிளறி பாழாக்கின.

அவருடைய வீட்டு முற்றத்தில் தங்களுடைய கழிவுகளால் அசிங்கப்படுத்தின. Continue reading “புத்தியைப் பயன்படுத்து”

வழிகாட்டுதல் ‍- சிறுகதை

வழிகாட்டுதல்

குழந்தைகளுக்கு, எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வேண்டும்.

பெற்றோர்களில் சிலர், சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள, குழந்தைகளை நேரடியாகப் பழக்குவது இல்லை.

ஒரு சூழ்நிலையில் நடந்து கொள்ளச் சொல்லும்விதம், மற்றொரு சூழ்நிலைக்குப் பொருந்துவது இல்லை.

ஆதலால் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று , குழந்தைகளுக்கு நன்கு விளக்கிப் புரிய வையுங்கள். Continue reading “வழிகாட்டுதல் ‍- சிறுகதை”