அறிவும் வேண்டும் இதயமும் வேண்டும்

வாழ்க்கையை அணுக இருமுறைகள் உண்டு. அறிவு பூர்வமாக அணுகுவது. இதய பூர்வமாக அணுகுவது.

அறிவு பொருளாதார வாழ்வை வளப்படுத்த தேவை தான். பொருளாதார வளம் நமக்கு நிறைவை கொடுத்து விடுமா?

எனக்குள் தோன்றிய கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். என்னுள் தோன்றிய எண்ணங்களை வார்த்தை ஆக்க முயல்கிறேன்.

Continue reading “அறிவும் வேண்டும் இதயமும் வேண்டும்”

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கைத்தொழில்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். Continue reading “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்”

ஒட்டகம் போல் முன்னேறு

ஒட்டகம் போல் முன்னேறு

ஒட்டகம் போல் முன்னேறு என்ற கதை, இலக்கை நோக்கிய நம் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முன்னேறுவதில் பொறுமை மிகவும் அவசியமான ஒன்று.

இலக்கை அடைவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்கை நோக்கி நடக்கும் வழிப்பயணமும் வாழ்க்கை தான். Continue reading “ஒட்டகம் போல் முன்னேறு”

வாழ்த்துக்கள்! எஸ்.ராமகிருஷ்ணன்

சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.

இலக்கியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் மேலும் பல சிறப்புகளைப் பெற இனிது வாழ்த்துகிறது.