அழியும் பறவைகள்

பறவைகள்

சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.

சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.

ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.

நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. Continue reading “அழியும் பறவைகள்”

பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்

பூமி

சில மாதங்களுக்கு முன்னர் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு நினைவு வந்தது.

நான் படுத்திருக்கும் பூமியின் இந்தப் பகுதியின் ஆழத்தில் என்ன இருக்கும் என எண்ணத் தொடங்கினேன்.

மண் – கல் – தண்ணீர் – கச்சா எண்ணெய் – நெருப்பு – இது மையப் பகுதி. அதனையடுத்து… என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன். Continue reading “பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்”

முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?

முட்டை

முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்பது காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் கேள்வி. Continue reading “முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?”