வாட்ச் அவசியமா? – சிறுகதை

வாட்ச் அவசியமா?

“வாட்ச் அவசியமா உனக்கு?” ஆறாவது படிக்கும் தனது மகனைப் பார்த்து பாலு கத்தினான்.

“இப்ப எதுக்கு அவன சத்தம் போடுறீங்க?” என்றபடி பாலுவின் மனைவி வானதி கேட்டாள்.

“ஆறாவது படிக்கிறவனுக்கு வாட்ச் அவசியமா?” என்றபடி மனைவியையும் மகனையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பாலு.

“வாட்ச் தானே கேட்டேன். என்னமோ ஏரொப்ளேன் கேட்ட மாதிரி குதிக்கிறாரு?” என்று விசும்பினான் பாலுவின் மகன் முரளி.

Continue reading “வாட்ச் அவசியமா? – சிறுகதை”

இறுதி வரிகள் – கவிதை

கண்ணே, கவியே, காதலே என்று

உன்னை சலித்திடாமல் தமிழிலும்

ஸ்வீட்ஹார்ட், பேபி, மை லவ் என்று

ஆங்கிலத்திலும் என்னால் கிறங்கடிக்க முடியும்

ஆனால் நான் அதை செய்வதாய் இல்லை

Continue reading “இறுதி வரிகள் – கவிதை”

கசக்கும் பலா – சிறுகதை

கசக்கும் பலா

மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்தக் கடைவீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்பவர்களின் மத்தியில் வித்தியாசமான ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை கொஞ்ச நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

அன்று அலுவலகம் சென்று கொண்டிருந்த சமயம் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்திய அவனிடம் பிரகாஷ், “உனக்கு என்னப்பா குறைச்சல்? கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு? இந்த வயசில உழைச்சு சம்பாதிக்க வேண்டிய நீ, இப்படி பிச்சை எடுக்கிறயே, உனக்கே இது நியாயமாப்படுதா?”

Continue reading “கசக்கும் பலா – சிறுகதை”

பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை

யார் கொடுத்து வைத்தவர்? - சிறுகதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த ஊரில் பங்குனி மாதம் நடைபெறும் அம்மன் பொங்கல் திருவிழா கொரனா நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்த வருடம் கொரனாவுக்கான தடை நீக்கப்பட்டதால் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊரில் தீர்மானிக்கப்பட்டது.

ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வெளியூரிலிருக்கும் விருந்தினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

என் பெற்றோரும் வெளியூரில் இருக்கும் எனக்கும் என் தம்பிக்கும் அழைப்பு விடுக்க, நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக ஆஜரானோம்.

Continue reading “பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை”