ஞானி – கவிதை

“அரச மரத்தடியிலோர்
ஆண்டியிருக்கிறார்
எல்லார் குறைக்கும்
ஏதோ வழி பகிர்கிறார்”

வேறொருவர் சொல்லக்கேட்டு
வேகமாய்ச் சென்றிட்டேன்
மந்தகாசப் புன்னகையோடு
மௌன முகமொன்று
மலர்ந்ததெனைக் கண்டு
அண்மையில் சென்று நன்மை நாடினேன்

Continue reading “ஞானி – கவிதை”

கெடுவான் – சிறுகதை

கெடுவான்

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் செங்குளம் கிராமத்தின் சந்திப்பு இருக்கிறது. சுமார் ஐநூறு குடும்பங்களை உள்ளடக்கிய கிராமம்.

சந்திப்பிற்கும் ஊருக்கும்மான இடைவெளி ஒரு மைல் தொலைவு இருக்கும். அந்த ஒரு மைல் தொலைவு சாலையின் குறுக்காக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில்வே இருப்புப் பாதை ஒன்று சென்றது.

உச்சி வெயில் அனலாய் காய்ந்துக் கொண்டிருந்தது. சாலையெங்கிலும் கானல் நீர் காட்சி தந்து கொண்டிருந்தது.

Continue reading “கெடுவான் – சிறுகதை”

டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை

டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட்

அந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை! அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.

நந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.

Continue reading “டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை”