உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!

உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது

உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது

Continue reading “உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!”

சாகாவர பருக்கை …

சகாரா பாலைவனம்

இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …

Continue reading “சாகாவர பருக்கை …”

இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை

அன்று காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே அன்றைய ஆங்கில வகுப்பை நினைத்து ரகுவுக்கு பயம் காரணமாக வயிற்றில் புளியைக் கரைத்தது.

‘கோடை விடுமுறையைக் கழித்த விதம்’ பற்றி மாணவர்களைக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தார் ஆங்கில ஆசிரியர். வகுப்பில் கண்டிப்பாக கட்டுரையைப் பற்றிக் கேட்பார்.

ரகுவுக்கு விளையாட்டில் இருக்கும் ஆர்வம் படிப்பில் இல்லை. ஆங்கில ஆசிரியர் கூறியிருந்ததை சுத்தமாக மறந்து விட்டிருந்தான்.

Continue reading “இன்னா செய்தாரை ஒறுத்தல் – கதை”