பொங்கலோ பொங்கல் – கவிதை

பொங்கல்

பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்

Continue reading “பொங்கலோ பொங்கல் – கவிதை”

என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட

காடுகரை செழிச்சுக் கிடக்க

மாடு மேய்க்க போன எனக்கு

பசி எடுக்க வழியுமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை

Continue reading “என்னதான் மிச்சமிருக்கு?”

உறைகுருதிக்கு அனல்காய்க

தாய்ச்சி யான தமிழ்நிலத்தில்
தவத்தால் வந்து பிறந்தவனே
காய்ச்சுப் பாலின் சுவையெனவே
கன்னல் தமிழைக் கொண்டவனே
வீச்சும் கைவாள் எறிதிறலில்
வெங்கான் சீயம் தலைவிழவே
பீய்ச்சுங் குருதிப் புனல்நடந்து
புழுதிக் காட்டை உழுதவனே

Continue reading “உறைகுருதிக்கு அனல்காய்க”

ஆங்கிலப் புத்தாண்டு – அன்பான வாழ்த்துக்கள்

பிறக்குது பிறக்குது புதுவருசம்…

பொங்கிப் பெருகுது வள விருட்சம்….

சிறகினை விரித்து பறந்திடவும்….

சிகரங்கள் தொடும்வரை உயர்ந்திடவும்….

Continue reading “ஆங்கிலப் புத்தாண்டு – அன்பான வாழ்த்துக்கள்”