செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி

செய்யிது ஆசியா உம்மா - சூஃபி ஞானி

செய்யது ஆசியா உம்மா அவர்கள் அல்லாவின் பெருமையை இனிய தமிழில் பாடிய சூஃபி ஞானி. அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தோன்றியவர்.

தமிழக வரலாற்றில், பல்வேறு மதங்களின் இறைஞான சிந்தனைகள், இறையாண்மைத் தத்துவங்கள் போன்றவை குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.

அக்காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்று அவை, பெரும்பாலான மக்களைப் பண்படுத்தி வழிப்படுத்தின என்றால் மிகையாகாது.

ஏகத்துவக் கொள்கையைப் பறைசாற்றும் சூஃபிசம் ’இஸ்லாத்தின் உள்ளுணர்வு’ வெளிப்பாடாகச் சமூகத்தில் கவனிக்கப் பெற்றது.

இதன் வழி இறையாண்மைக் கொள்கையை, இஸ்லாத்திற்குள் முதன் முதலாக நுழைய வருபவருக்கும், இஸ்லாத்தில் உள்ளவர்களுக்கும் ஆழமான முதிர்ச்சியைத் தர முடிந்தது. ஆன்மீகத்தின் தேடலாகவும் அமைந்தது.

Continue reading “செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி”

இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை

புத்தாண்டே வருக! வருக!

நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி

நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல

வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க

இடுக்கண் களையும் தமிழே வருக!

Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை”

அன்னை – கவிதை

பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து

திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்

புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்

குழந்தை யென்றே படைப்பவள் அவளே…

Continue reading “அன்னை – கவிதை”

என் ராதையை அறிவாயா? – கவிதை

வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே

என் ராதையை அறிவாயா?

சின்னஞ்சிறு சிரிப்பில்

உன் இன்னிசையை தோற்கடிப்பாள்

அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்

உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்

Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”