தனிக்குடித்தனம் – சிறுகதை

தனிக்குடித்தனம் - சிறுகதை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.

அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.

‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

Continue reading “தனிக்குடித்தனம் – சிறுகதை”

பாவ் பாஜி செய்வது எப்படி?

பாவ் பாஜி

பாவ் பாஜி மும்பையின் புகழ் பெற்ற உணவு ஆகும். இப்போது இந்தியா முழுவதும் பலர் இதனை விரும்புகின்றனர்.

பாவ் பாஜி என்பது ரொட்டியுடன் (பன்னுடன்) மசால் காய்கறி சேர்த்து செய்யப்படுகிறது. பாவ் என்பது ரொட்டியையும், பாஜி என்பது மசால் காய்கறியையும் குறிக்கும்.

Continue reading “பாவ் பாஜி செய்வது எப்படி?”

நரசிங்க முனையரைய நாயனார் – ஆரூராரின் வளர்ப்புத் தந்தை

நரசிங்க முனையரைய நாயனார்

நரசிங்க முனையரைய நாயனார் ஆரூரார் என அழைக்கப்படும் சுந்தர நாயனாரின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

இவர் அருவெறுக்கத் தக்க தோற்றத்துடன் திருநீறு அணிந்து வந்த நபரிடம் வேற்றுமை பாராது அன்பு காட்டிய அரசர் ஆவார்.

நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி. அதனை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரைய நாயனார்.

Continue reading “நரசிங்க முனையரைய நாயனார் – ஆரூராரின் வளர்ப்புத் தந்தை”

வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30

வேற்றுலக நீர்

இரவு பத்து மணி இருக்கும்.

பெருமளவில் செயற்கை மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், முழுநிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.

மேகக் கூட்டங்கள் இல்லை. இயந்திர சத்தம் எதுவும் இல்லை. பறந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியினை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது.

இரவு வானத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே, மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன். சட்டென எனது கவனம் அந்த மண் சட்டியில் சென்றது.

ஆம். கோடை காலங்களில் பறவைகளுக்காக அகண்ட மண்சட்டியில் நீரும், அதன் அருகில் தானியங்களும் வைப்பது வழக்கம்.

Continue reading “வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30”