சோமாசி மாற நாயனார் – சோம வேள்வி செய்து சுந்தரரால் சிவப்பேறு கிடைக்கப் பெற்றவர்

சோமாசி மாற நாயனார்

சோமாசி மாற நாயனார் உலக நன்மைக்காக சோம வேள்வி செய்து சுந்தரரால் இறையருள் கிடைக்கப் பெற்ற மறையவர்.

இவர் நடத்திய வேள்வியில் இறைவனே நேரில் வந்து தன்னுடைய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியை போற்றும்விதமாக இன்றும் அம்பர் மாகாளத்தில் திருவிழா நடைபெறுகிறது.

பண்டைய சோழ நாட்டில் திருவம்பர் என்னும் பழமையான தலத்தில் வசித்த வேதியர் ஒருவர் சிவபெருமானிடம் பேரன்பு கொண்டிருந்தார். அவருடைய பெயர் மாறனார் என்பதாகும்.

Continue reading “சோமாசி மாற நாயனார் – சோம வேள்வி செய்து சுந்தரரால் சிவப்பேறு கிடைக்கப் பெற்றவர்”

அம்பர் குறும்படம் விமர்சனம்

அம்பர் - குறும்பட விமர்சனம்

அம்பர் குறும்படம் ஒரு வசனம் கூட இல்லாத படம்; ஓராயிரம் உணர்வுகளை வெளிக்காட்டி நிற்கும் படம்.

ஒர் இலக்கியம் படிப்பவரிடமோ, பார்ப்பவரிடமோ இனம் காட்ட முடியாத கன‌த்தை நெஞ்சில் ஏற்றி விட்டுச் செல்லுமானால், அந்த இலக்கியம் காலத்தால் நிலைத்து நிற்கும். தலைமுறை தலைமுறையாகக் கவனிக்கப்பட்டுப் போற்றப்படும்.

இவ்வகையில் அம்பர் குறும்படத்தைப் பார்த்து முடிக்கையில், ஏக்கம், தவிப்பு, இரக்கம் என உணர்வு மேலிட மனம் கனத்துப் போய் விடுகிறது.

Continue reading “அம்பர் குறும்படம் விமர்சனம்”

நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

நிலத்தடி நீர்

‘மக்கும் குப்பைகளை, வீட்டுத் தோட்ட மண்ணில் புதைத்து வைத்தால், மண் வளம் கூடுமே. அந்த செழிப்பான மண்ணை பயன்படுத்த, செடிகள் நன்றாக வளருமே’ என்ற எண்ணம் வெகுநாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று இந்த வேலையை செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்றேன். மண்வெட்டியை பயன்படுத்தி ஒரு சிறிய பள்ளத்தை உண்டாக்கினேன்.

இன்னும் ஆழத்தை அதிகப்படுத்தலாம் என்று தோன்றியது. அதன்படி, பள்ளத்தின் ஆழத்தை மேலும் அதிமாக்கினேன்.

Continue reading “நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25”

புதிதாய் சூடிக்கொள்

அன்பிற்கு அடிபணி

ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்

இல்லாமை என்பதே இயலாமை கண்ணே

ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை

Continue reading “புதிதாய் சூடிக்கொள்”

தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2

தள்ளுபடி - படிப்பது எப்படி? - பாகம் 2

தள்ளுபடி எப்படி உங்களைப் படிக்க வைக்கும் என நீங்கள் மலைக்கலாம். வெற்றிப் படிகளில் ஏறத் தொடர்ந்து படியுங்கள்!

நி​னைப்பவர்கள் அல்ல; நடப்பவர்கள் மட்டு​மே இலக்கை ​சென்ற​டைய முடியும்.

என்ன படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

எப்படி ஆரம்பிப்பது என்கிற எண்ணம் வருகிறது அல்லவா!

நீங்கள் படிப்பது ​தேர்வுகளில் நல்ல மதிப்​பெண்கள் எடுப்பதற்காவும் மற்றும் ​போட்டித் ​தேர்வுக​ளை ​வெற்றி ​கொள்வதற்கு உங்க​ளை தகுதியாக்கிக் ​கொள்ளவும்தான்.

Continue reading “தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2”