தி கால் குறும்படம் விமர்சனம்

தி கால்

தி கால் குறும்படம் மனித உணர்வுகளைப் பதம் பார்க்கும் ஆங்கில மொழிக் குறும்படம் ஆகும்.

இதன் இயக்குனர் ‘அம்மர் சோண்டர்பெர்க்‘ ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் திரைப்படத் தயாரிப்பாளர்.

2007 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் படத்திற்கான பரிசை வென்றார். அப்போதிருந்து அவரது படங்கள் பார்வையாளர்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டின.

அவரது குறிப்பிட்ட ஒரு குறும்படம் ‘ஒரு மகளிடமிருந்து கடிதம்’. இது சில நாட்களில் தயாரிக்கப்பட்டது ஒரு சாதனையாகும்.

இக்குறும்படம் சமூக ஊடகங்களில் பல மில்லியன் முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

Continue reading “தி கால் குறும்படம் விமர்சனம்”

கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். உலக வெப்பமயமாதல் என்ற கத்தி மனித சமூகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்றைய தலைமுறை இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதைப் புறக்கணித்தால், மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்று எதிர் காலத்தில் பிற உயிரினங்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரலாம்.

இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவுக்கு வந்து விட்டோம் என்று இன்றைய தலைமுறை நினைக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளாகத்தான் நாம் நிறைய மாறி விட்டிருக்கிறோம்.

நம் வாழ்வில் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம். ஆனால் போகும் பாதை சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாக இருந்தது. அந்த வாழ்க்கை முறையை நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்”

கவிதை மனம்

எழுதி வைத்ததை வாசிக்கின்றேன் – அந்த

எழுத்துக்கள் ஒளிவிட நேசிக்கின்றேன்

பழுதில்லா வார்த்தைகள் சுமக்கிறேன் – காதல்

பாவை அவள் மடி துயில்கிறேன்

Continue reading “கவிதை மனம்”

கற்கை நன்றே

கற்​கை நன்​றே

ஒரு பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதி சமீபத்தில் என்​னை சந்தித்தார்.

அவர் மாணவ மாணவியர் ​போட்டித் ​தேர்வுகளுக்குத் தங்க​ளை தயார் ​செய்து ​கொள்ள ஏதுவான ​மென்​பொருள் ஒன்றி​னை தங்கள் நிறுவனம் அறிமுகம் ​செய்திருப்பதாகக் கூறி, அத​னைப் பற்றி எனக்கு விளக்கமளித்தார். ​

தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பது என்பதில் ஆரம்பித்து, ஒவ்​வொரு பாடத்தைப் பற்றியும் ​நேர்த்தியான விளக்கங்கள், எளிய மு​றையில் வினாக்க​ளை எதிர்​கொள்ளத் தே​வையான யுக்திகள், விரிவான வினா விடைகள் மற்றும் பல்​வேறு ​தேர்வுப் பயிற்சிகள் என ​சிறப்பாகச் ​செய்து காண்பித்தார்.

Continue reading “கற்கை நன்றே”

காஜு கத்லி – சிறுகதை

காஜு கத்லி

அகல்யாவும் ஷர்மிலியும் கலைக் கல்லூரி ஒன்றின் கணினிப் பிரிவு பேராசிரியைகள்.

விழித்திருக்கும் 90 சதவிகித நேரத்தை பணி இடத்திலேயே செலவிடுபவர்களுக்கு, சக பணியாளர்களே சொந்தமாக உறவாக மாறிப் போகிறார்கள்.

அப்படிதான் அகல்யாவும் ஷர்மிலியும் நட்பாகி, உறவாகி, தங்கள் சுகம், துக்கம், மகிழ்ச்சி, குடும்பம், வேலை என எல்லா சங்கதிகளையும் பரிமாறிக்கொண்டு வாழ்பவர்கள்.

கல்லூரியில் பாடம் எடுப்பது மட்டும் வேலை இல்லை. அது சார்ந்த நிறைய பணிகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பணிச்சுமை தீராத அழுத்தத்தை தந்து கொண்டே இருக்கும்.

Continue reading “காஜு கத்லி – சிறுகதை”