தக்காளி குருமா செய்வது எப்படி?

தக்காளி குருமா

தக்காளி குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவைகளுக்கு அருமையான தொட்டுக்கறி.

தக்காளியில் சட்னி மட்டுமே செய்தவர்கள் இந்த குருமாவை தயார் செய்யலாம். இதனை தயார் செய்யும் நேரமும் குறைவு என்பதோடு செய்யும் முறையும் எளிது.

இதில் கிராம்பு, பட்டை, சோம்பு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

இனி சுவையான தக்காளி குருமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “தக்காளி குருமா செய்வது எப்படி?”

அப்பூதி அடிகள் – அப்பரை குருவாகக் கொண்டு சிவபதம் பெற்றவர்

அப்பூதி அடிகள் நாயனார்

அப்பூதி அடிகள் அப்பரை மனதால் குருவாகக் கொண்டு சிவபதத்தைப் பெற்றவர்.

இறைவனின் அன்பரும் இறையடியாரின் அன்பரும் சமமே என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் அப்பூதி அடிகள் இருபத்தைந்தாவது நாயன்மாராகப் போற்றப்படுகிறார். அப்பரும் அப்பூதி அடிகளும் சம காலத்தவர்கள்.

(அப்பர் என்பது திருநாவுக்கரசு நாயனாரின் இன்னொரு பெயராகும்.)

Continue reading “அப்பூதி அடிகள் – அப்பரை குருவாகக் கொண்டு சிவபதம் பெற்றவர்”

சுமைகளையே சுமப்பதில் இன்பம்

சுழலும் காற்றின் துகளாக

தொலைவினில் நானும் விழுந்தெழுந்தேன்

எழுந்த எந்தன் கால் வழியே

விலகும்புவியை நான் உணர்ந்தேன்

Continue reading “சுமைகளையே சுமப்பதில் இன்பம்”

நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17

நீரின் சுவை - நீருடன் ஓர் உரையாடல் - 17

மூன்று நாட்களுக்கு முன்பு, மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்து சென்றனர். கூடவே, ஒரு பெரிய பை நிறைய மாங்காய்களையும் கொண்டு வந்திருந்தனர். அவை எல்லாம் அவர்களது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் காய்த்தவை.

“வீணா போயிடப் போகுது. ஊறுகாயாவது செய்யுங்க” என்று அப்பா அந்த மாங்காய்கள் குறித்து அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கோ மாங்காய் ஊறுகாய் செய்வதில் அந்த அளவு ஆர்வமில்லை. ‘அவ்வளவு மாங்காய்களையும் என்ன செய்யலாம்’ என்று யோசித்தேன்.

அப்பொழுது ஒருமுறை ‘உலர் இனிப்பு மாங்காய் துண்டுகளை’ நண்பன் எனக்கு தந்தது நினைவிற்கு வந்தது. ‘சரி அதையே செய்திடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17”

5+5 குறும்படம் விமர்சனம்

5+5 குறும்பட விமர்சனம்

5+5 குறும்படம் சமகாலச் சமூகத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டும் அற்புதமான‌ படம்.

புலனத்திலும் (வாட்சப்பிலும்) முகநூலிலும் எல்லோராலும் அதிகமாகப் பகிரப்பட்ட, பார்க்கப்பட்ட படம் இக்குறும்படம்.

ஆசிரியருக்கும் மாணவனுக்குமான இடைவெளி. ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் ஆன இடைவெளி. பெற்றோருக்கும் பள்ளிக்கும் ஆன இடைவெளி. பள்ளிக்கும் ஆசிரியருமான இடைவெளி. இத்தகைய‌ மிகப்பெரும் வெளியை, 3.45 நிமிடத்திற்குள் விளக்கி விட எத்தனிக்கிறது 5+5 குறும்படம்.

ஏதோ ஒரு விதத்தில், இந்தப் படத்தைப் பார்க்கிற அனைவரும் இதில் ஏதாவது ஒன்றில் அடிபட்டுச் சிதைந்து இருக்கலாம். அதன் வடுக்கள் ஆறாமல் நமக்குள் வலித்துக் கொண்டே இருக்கலாம். அதன் சாயல் தான் இப்படம்.

Continue reading “5+5 குறும்படம் விமர்சனம்”