பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை

பாலுவும் தயிர்சாதமும்

கடைசி மணி அடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல பள்ளியை விட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். ஒன்பதாவது படிக்கும் பாலு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் பொறுமையாக நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும் புத்தகப் பையை ஜன்னலோரம் வைத்துவிட்டு எதையோ சிந்தித்தபடி கதவின் அருகில் அமர்ந்தான். மதியம் பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

மதிய உணவு இடைவேளையில் பாலு நண்பர்களோடு சாப்பிடும்போது, ஒருவன் கேட்டான்.

Continue reading “பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை”

மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”

பேசுவது கிளியா? – சிறுகதை

பேசுவது கிளியா? – சிறுகதை

துர்காவிற்கு நாளை மறுநாள் பிறந்த நாளாம். எதிர்வீட்டிற்கு இரு மாதங்களுக்கு முன் தான் குடிவந்திருந்தார்கள்.

தான் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனிலிருந்து காலை வேளையில் நியூஸ் பேப்பர் படிக்கிற சாக்கில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கும் வழக்கம் சென்ற ஒரு மாத காலமாக பாலனிடம் ஏற்பட்டிருந்தது.

வாசலில் கோலமிட வருவாள். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தான். அதற்குள் உள்ளே சென்று விடுவாள். அதன் பின் அவளைப் பார்க்க முடியாது. பிரம்மதேவன் படைப்பில் அவள் ஒரு வித்தியாசமான படைப்பு.

Continue reading “பேசுவது கிளியா? – சிறுகதை”

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்

நீயும் கற்கலாம் தமிழை என்று கலியன் சவுரி ராஜப் பெருமாளை அழைக்கிறார்.

கலியன் என்பது திருமங்கை ஆழ்வாரின் பெயராகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணபுர‌த்தில் உள்ள சவுரி ராஜப் பெருமாளை நீயும் கற்கலாம் தமிழை என்று அழைக்கிறார்.

Continue reading “நீயும் கற்கலாம் தமிழை என்றழைத்த கலியன்”