உப்பு நதி பற்றி தெரியுமா?

இந்தியாவின் உப்பு நதி

உப்பு நதி பற்றி தெரியுமா? என்ற கேள்வி உங்களை ஆச்சர்யப்படுத்துகிறதா?

உண்மையில் உப்பு நதி இந்தியாவில் இருக்கிறது. கூடுதல் தகவல் அது தார் பாலைவனத்தின் மிகப்பெரிய நதி. அதனுடைய பெயர் லூனி என்பதாகும்.

பொதுவாக ஆறுகள் நன்னீரினைக் கொண்டு இறுதியில் கடலிலோ, மற்ற பெரிய ஆறுகளிலோ சென்று கலக்கும். ஆனால் இந்நதி வித்தியாசமாக உப்பு நீரினைக் கொண்டு இறுதியில் சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.

Continue reading “உப்பு நதி பற்றி தெரியுமா?”

எதார்த்தம் – கவிதை

கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு

கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது

சுயநலத்தின் எதார்த்தம்

நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்

சாலையில் கிடந்தால்

இரண்டாயிரத்தை எடுப்பது

ஆசையின் எதார்த்தம்

Continue reading “எதார்த்தம் – கவிதை”

தென்றலே – கவிதை

தென்றலே

தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ

தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்

கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ

குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்

Continue reading “தென்றலே – கவிதை”

வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?

வாழைக்காய் பஜ்ஜி

வாழைக்காய் பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. இதனைச் சுவையாகவும், எளிதாகவும் கடைகளில் கிடைப்பதைப் போன்ற சுவையுடனும் செய்யலாம்.

இதனைத் தயார் செய்ய சிறிதளவே நேரம் பிடிக்கும்.

பஜ்ஜிக்கான மாவை சரியான பதத்தில் கரைத்தால் சுவை மிகும்.

பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

Continue reading “வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?”

இயற்பகை நாயனார் – மனைவி தானம்

இயற்பகை நாயனார்

இயற்பகை நாயனார், இறைவனால் கொடுக்கப்பட்ட அனைத்தும் இறையடியாருக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில், சிவனடியாருக்குத் தன் மனைவியை தானமாக அளித்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் முன்பு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் இயற்பகையார் என்பதாகும். அவர் சிவனிடத்தில் மாறாத அன்பு கொண்டிருந்தார்.

Continue reading “இயற்பகை நாயனார் – மனைவி தானம்”