கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?

கம்பு இடியாப்பம்

கம்பு இடியாப்பம் சத்தான ஆரோக்கியமான உணவு ஆகும். கம்பு சிறுதானிய வகைகளுள் ஒன்று. இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். கம்பில் அடை, தோசை, லட்டு, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.

அதே நேரத்தில் கம்பில் இடியாப்பம் செய்வது, எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான உணவாகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இனி சுவையான கம்பு இடியாப்பம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?”

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஐந்தாவது பாடலாகும்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், அடியவர்களுக்கு எளியவராகத் திகழும் சிவபெருமானின் மீது, திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்”

சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

சில நாட்கள் கடந்தன.

கனலி அதிகாலையிலேயே வந்து வாக்டெய்லின் உடல்நிலையை பரிசோதித்தது. வாக்டெய்லின் இறகுகளில் காயம் ஆறத் துவங்கியிருந்தது. உடலின் மற்ற பாகங்களில் இருந்த காயங்கள் எல்லாம் முழுவதுமாக ஆறியிருந்தன.

அதனால், வாக்டெய்லின் உடல்நிலை சீராகியிருப்பதை கனலி உறுதி செய்துக்கொண்டது.

வாக்டெய்லும் “வலி ஏதும் இல்லை” என்று கூறியது.

“வாக்டெய்ல், உன்னோட உடல்நிலை சீராகி இருக்கு” என்றது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்”