பூவே

பூ

பூவே,
பூந்தோட்டத்தில் நான் உன்னைக் காணப்
படைத்தான் கடவுள்!

மகிழ்வாய் நீ
மனம் பரப்புகிறாய் உலகெங்கும்!

அலைகள் ஓயலாம்; உன்னைக் காணும்
ஆசை ஓயாது பெண்களுக்கு!

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?

என்னுடைய செல்ல நாய் வீட்டிற்கு வெளியே வந்த என் மகளை வேகமாகச் சென்று மூக்கால் உரசியது. உடனே என் மகள் “நாயோட மூக்கில இருந்த ஈரம் கைல ஒட்டிருச்சு” என்று அழுதாள். நானும் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதை அடிக்கடி கவனித்திருக்கிறேன்.

கால்நடை மருத்துவரிடம் நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். Continue reading “நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்?”

பொறுமை தந்த பரிசு – சிறுவர் கதை

பொறுமை தந்த பரிசு

புனலூர் என்ற ஊரில் செல்லையா என்னும் செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களும், நிறைய பசுக்கள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளும் இருந்தன.

அவர் பணத்தில் மட்டுமல்லாது இரக்க குணத்திலும் செல்வந்தராக விளங்கினார். ஏழை, எளிய மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார். Continue reading “பொறுமை தந்த பரிசு – சிறுவர் கதை”

எள் – எண்ணெய் வித்துகளின் ராணி

எள் - எண்ணெய் வித்துகளின் ராணி

எள் பண்டைய காலம் தொட்டு உணவுப் பழக்கத்தில் இருந்து வரும் முக்கியமான உணவுப் பொருளாகும். இது மனிதன் அறிந்த எண்ணெய் வித்துகளில் மிகவும் பழமையானது.

மற்ற எண்ணெய் வித்துக்களைவிட நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதால் இது எண்ணெய் வித்துக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் தீர்க்கும் பண்புகளின் காரணமாக இது உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பராம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading “எள் – எண்ணெய் வித்துகளின் ராணி”

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தனியாகவோ, சாதத்துடன் சேர்த்து உண்ணவோ ஏற்ற நொறுக்குத்தீனி ஆகும். இதனை எளிதாக வீட்டிலே செய்யலாம்.

குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போதோ, ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கோ இதனை செய்து கொடுத்து அனுப்பலாம். சுலபமான முறையில் சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?”