நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி

ஊஞ்சலில் ஆடும் பெண்

பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க

பைந்தமிழ் சாத்திரம் பலவும்

கற்றோர் வாழென வாழ்த்துரைக்க

குறளும் ஔவையும் துணையிருக்க Continue reading “நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி”

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

இரத்தம்

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.

டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.

இந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்?

தன்னுடைய பலக் குறைவாலா?

இல்லை; ஒற்றுமை குறைவால். Continue reading “சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்”

அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

நூலகம்

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”

சிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்

சிவப்பு பாண்டா

இன்றைக்கு இணையத்தை இணைக்கும் முக்கியமான உலாவி, மோசில்லா ஃபயர் பாக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஃபயர் பாக்ஸ் என்பதன் பொருள் தெரியுமா?

இதில் ஃபயர் பாக்ஸ் என்பதின் பொருள் சிவப்பு பாண்டா ஆகும்.

இன்னொரு முக்கியமான விசயம் சிவப்பு பாண்டாக்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இன்றைக்கு உலகில் மொத்தமே 10,000 சிவப்பு பாண்டாக்களே உள்ளன. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading “சிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்”

ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி?

சுவையான ரோட்டோர காளான் மசாலா

ரோட்டோர காளான் மசாலா என்பது தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவு வகை ஆகும்.

இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வீட்டில் எளிய முறையில் சுவையான காளான் சில்லி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி?”