ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது. புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

நடப்பது எல்லாம் நன்மைக்கே

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கேட்டது. ‘பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா’ என்று ஆர்வ மிகுதியால் பெரியவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கூர்ந்து கேட்கலானது.

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா தற்செயலாகக் கேட்டது. ‘இந்தப் பழமொழி ஏதோ மூஞ்சுறு எலியை பற்றி கேலியாக கூறுவது போல் அமைந்துள்ளதே’ என்று மனதிற்குள் எண்ணியது. பழமொழியைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என ஆர்வமுடன் ஆசிரியர் கூறுவதை தொடர்ந்து கவனிக்கலானது.

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம் என்ற பழமொழியை ஆற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த பாட்டி கூறுவதை வரிக்குதிரை வண்ணமுத்து கேட்டது.

சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கூறுவதை தேன்சிட்டு தென்னவன் கேட்டது. பூவில் தேனை உறிவதை விட்டுவிட்டு ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறாரா என கேட்கலாயிற்று.