வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை

வைரஸால் பயன் உண்டா?

கடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.

அன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.

மூன்றுநாட்களில் இத்தனை மெயிலா? (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.

அவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக‌ இருந்தன. Continue reading “வைரஸால் பயன் உண்டா? – அறிவியல் குறுங்கதை”

மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்

மெழுகு சிகிச்சை

வலி அனைத்து உயிரினங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒரு உணர்வு.

மருத்துவ உலகில் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே ஏராளமான மாத்திரைகள், வெளிப்பூச்சு மருந்துகள், ஊசி மருந்துகள் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்தே வலி குறைப்பிற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணரலாம். Continue reading “மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்”

நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை

நகை என்னும் மெய்ப்பாடு

நகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.

எப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன?

இகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.

வடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம். Continue reading “நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை”