சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை பெண் ஒருத்தி கூறியதை சில்வண்டு சிங்காரம் கேட்டது. அப்பழமொழிக்கு மற்றொரு பெண் “பாத்திரத்தில் உணவு இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்பதுதானே இதற்கான பொருள்” என்று கூறினாள்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது.

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று சிறுவர்களுக்கு ஆசிரியர் பழமொழி சொல்லித் தருவதை மரத்திலிருந்து குரங்கு ரங்கன் கவனித்துக் கொண்டிருந்தது.

உண்மை உணர நாடு தயங்குது

களைப்பில் அன்று மண்ணும் தூங்கிக் கிடந்தது காற்றும் அன்று சோர்வாகிப் போனது உழைப்பு இல்லாமல் என்ன இங்க இருக்குது உண்மை உணர மட்டும் நாடு தயங்குது

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழியைத்தான் நான் இன்று மாலை கூறுவேன் என்று தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னது தவளைகுட்டி தங்கப்பன்.