இசைக்காக இன்னுயிர் இழந்தோன்

இசைக்காக

‘சின்னத்தம்பி’ என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கிட்டதட்ட ‘சின்னத்தம்பி’ போன்று கேட்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் உடைய பாடகர் ஒருவர், எங்கள் ஊரில் இருந்தார். அவரது பெயர் முத்தையா. Continue reading “இசைக்காக இன்னுயிர் இழந்தோன்”

தம்மபதம் – புத்த சமய அற நூல்

தம்மபதம்

தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

Continue reading “தம்மபதம் – புத்த சமய அற நூல்”

இனிப்பு சாப்பிடாதே!

காந்தி

ஒரு முறை ஒரு தாய் காந்திஜியிடம் வந்து தன் மகனைக் கூடுதல் இனிப்பு சாப்பிடாமலிருக்க அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியோ அவர்களை மறுநாள் வரும்படிக் கூறினார்; மறுநாள் அவர்கள் வந்தனர்.
Continue reading “இனிப்பு சாப்பிடாதே!”

மரங்கள் அவை வரங்கள்

மரங்கள்

எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.

அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது. Continue reading “மரங்கள் அவை வரங்கள்”

அழியும் பறவைகள்

பறவைகள்

சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.

சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.

ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.

நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. Continue reading “அழியும் பறவைகள்”