ரணங்களின் நிறங்கள் – சிறுகதை

பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள்.

டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல்.

Continue reading “ரணங்களின் நிறங்கள் – சிறுகதை”

இருமனம் திருமணம் – சிறுகதை

இந்து திருமணம்

“என்னங்க….” கலக்கத்துடன் கணவனை அழைத்தாள் கீதா.

ஏறக்குறைய. அதேநிலையில் இருந்த குமார் மனைவியின் அழைப்பால் திரும்பினான்.

“என்ன கீதா?”

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க. நம்ம ரிப்போர்ட் எப்படி இருக்குமோ?”

“பயப்படாதே. நம்பிக்கையோட இருப்போம். நல்லதே நடக்கும்.”

Continue reading “இருமனம் திருமணம் – சிறுகதை”

ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

Continue reading “ஆலங்கட்டி – சிறுகதை”

இனிய சிநேகிதிக்கு – சிறுகதை

இனிய சிநேகிதிக்கு - சிறுகதை

சென்னையின் பிரபல ஜவுளிக்கடையில் இருந்தனர் கோமளம் குடும்பத்தினர்.

ஆயிற்று, அனைவர்க்கும் ஜவுளி எடுத்து முடித்தாயிற்று, இனி கிளம்ப வேண்டியதுதான்.

மகன் அஜய் பில் பணம் சரிபார்த்து கொடுக்க எத்தனிக்கையில் மருமகள் சுஜா, அவனது காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்த்தாள் கோமளம்.

Continue reading “இனிய சிநேகிதிக்கு – சிறுகதை”