Tag: உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் என்பது இன்றைக்கு மனிதகுலம் எதிர்நோக்கி உள்ள மிக முக்கியமான பிரச்சினை ஆகும். பூமி சூடாகிக் கொண்டே உள்ளது. உலகின் சராசரி வெப்ப நிலை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அனல் மின் நிலையங்கள், வாகனப் போக்குவரத்து மற்றும் இதர மனித நடவடிக்கைகளே உலக வெப்பமயமாதலுக்குக் காரணம்.

மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பொறுப்பாக செயல்பட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்றால் மனிதகுலம் முழுவதுமே அழிய வாய்ப்பு உள்ளது.

  • தினமும் அக்னி பிரவேசம் தான்…

    தினமும் அக்னி பிரவேசம் தான்…

    (மேலும்…)
  • கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018

    கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018

    கார்பன் அடிச்சுவடு அதிகம் கொண்ட நாடுகள் 2018 பட்டியலில் உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனா முதலிடம் பெற்றிருக்கிறது என்பதில் ஆச்சர்யமில்லை.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நாடுகளுக்கான இந்த பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது; இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

    கார்பன் அடிச்சுவடு என்பது (Carbon FootPrint) ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவு ஆகும்.

    பசுமை இல்ல வாயுக்கள் என்பவை கார்பன்-டை-ஆக்சைடு, ஓசோன், நைட்ரஜன், மீத்தேன், கந்தக-டை-ஆக்சைடு, ஈத்தீன் மற்றும் ஃப்ரியான்கள் ஆகியவை ஆகும்.

    பசுமை இல்ல வாயுக்கள் புவியில் உயிரினங்கள் வாழத் தேவையான வெப்பத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    (மேலும்…)
  • கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்

    கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்

    இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். உலக வெப்பமயமாதல் என்ற கத்தி மனித சமூகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

    இன்றைய தலைமுறை இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதைப் புறக்கணித்தால், மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்று எதிர் காலத்தில் பிற உயிரினங்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரலாம்.

    இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவுக்கு வந்து விட்டோம் என்று இன்றைய தலைமுறை நினைக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளாகத்தான் நாம் நிறைய மாறி விட்டிருக்கிறோம்.

    நம் வாழ்வில் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம். ஆனால் போகும் பாதை சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

    நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாக இருந்தது. அந்த வாழ்க்கை முறையை நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

    (மேலும்…)
  • அமைதி வேண்டும் உலகிலே

    அமைதி வேண்டும் உலகிலே

    அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

    இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

    இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம். (மேலும்…)

  • நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

    நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

    நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும்.

    உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது.

    உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது. (மேலும்…)