மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.
ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.
தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.
1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!