உடல் பருமன் – குழந்தைகளின் எதிரி

உடல் பருமன்

உடல் பருமன் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் உடல்நலக் குறைபாடாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

பெரியவர்களாலேயே சமாளிக்க முடியாத சில உடல் உபாதைகள் உடல் பருமனால் ஏற்படுகிறது எனும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன், அதனால் அவர்கள் சந்திக்கும் உடல், மன, சமூக ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் அதனைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோர்களின் கவனம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு கட்டுரையே இது.

Continue reading “உடல் பருமன் – குழந்தைகளின் எதிரி”

கருப்பை இறக்கம்

கருப்பை இறக்கம்

கருப்பை என்பது முற்றிலும் தசைகளால் ஆன ஒரு பை போன்ற அமைப்பு. இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் கருப்பையை அதனிடத்தில் நிறுத்த துணை புரிகின்றன.

அத்தைய தசைகள் மற்றும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், தளர்வடைவதாலும் கருப்பையானது தனது நிலையிலிருந்து கீழிறங்குகிறது. Continue reading “கருப்பை இறக்கம்”

மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்

மெழுகு சிகிச்சை

வலி அனைத்து உயிரினங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒரு உணர்வு.

மருத்துவ உலகில் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே ஏராளமான மாத்திரைகள், வெளிப்பூச்சு மருந்துகள், ஊசி மருந்துகள் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்தே வலி குறைப்பிற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணரலாம். Continue reading “மெழுகு சிகிச்சை – வலிகளைக் குறைக்கும்”

நரம்பு வலுவிழப்பு நோய்

நரப்பு வலுவிழப்பு நோய்

உலகம் முழுவதும் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயாகவும், நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வரும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலோ அல்லது உடலில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் பராமரிக்கத் தவறியவர்களுக்கு உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைகின்றன. Continue reading “நரம்பு வலுவிழப்பு நோய்”

குதிகால் வலி குறைக்கும் வழி

குதிகால் வலி குறைக்கும் வழி

பூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்?

அப்படியானால் உங்களுக்கும், இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. இன்றைக்கு ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி. Continue reading “குதிகால் வலி குறைக்கும் வழி”