மசாலா டீ செய்வது எப்படி?

மசாலா டீ
மசாலா டீ அருமையான சூடான பானம் ஆகும். இதனை வடநாட்டில் மசாலா சாய் என்றும் அழைப்பர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மசாலா டீ சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் அருமையாக இருந்தது.

மசாலா டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை. வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.

Continue reading “மசாலா டீ செய்வது எப்படி?”

லெமன் ஜூஸ் செய்வது எப்படி?

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடை காலத்துக்கு ஏற்ற அருமையான சாறு வகைப் பானம். இது உடலின் பி.எச் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீர்ச்சத்தை ஈடுசெய்ய இதனை அடிக்கடி தயார் செய்து உண்ணலாம்.

மேலும் எலுமிச்சை ஜூஸில் உள்ள விட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.

எலுமிச்சை பழம் ஏனையப் பழங்களைவிட விலை குறைந்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுவதால் இதனை எல்லோரும் வாங்கி பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு தயார் செய்யும் முறையும் எளிது.

Continue reading “லெமன் ஜூஸ் செய்வது எப்படி?”

இளமை தரும் முந்திரி பால்

முந்திரி பால்

முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். 

சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி பால் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

Continue reading “இளமை தரும் முந்திரி பால்”

அழகு தரும் கழுதை பால்

கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”