சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்

கனலியின் முயற்சிகள்

காலை மணி ஏழு இருக்கும்.

அந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.

கனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.

“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.

Continue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”

சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு

இருன்டினிடே எடுத்த முடிவு

இங்கு

சொர்க்க வனத்தின் தெற்குப் பகுதியில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கிறது.

வாக்டெய்லை தொலைத்துவிட்ட துயரத்தில் இருந்து அவை மெல்ல மீண்டு வருகின்றன. ஆம், அவை தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் குருவிகள் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பியிருகின்றன என்றே சொல்லலாம்.

Continue reading “சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு”

சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி

கனலி சொன்ன செய்தி

தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.

சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”

சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்

வாக்டெய்லின் ஆறுதல்

அன்று காலை.

மரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.

அப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.

Continue reading “சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்”

சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?

வாக்டெய்லின் சுகவீனத்திற்கு காரணம்

அடுத்து இரண்டு நாட்கள் கடந்தன. சிலசமயங்களில் வாக்டெய்ல் கண்விழித்துப் பார்த்தது; பின்னர் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. எனினும், கனலியின் அறிவுரைப்படி மருந்துகளை சீரான இடைவெளியில் வாக்டெய்லுக்கு கொடுத்து வந்தது ஆடலரசு.

நான்காம் நாள்…. வாக்டெய்லின் உடல்நிலை தேறியது. Continue reading “சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?”