சொர்க்க வனம் – தொடர்கதை

தாயகம் தாண்டிப் பயணம்

சொர்க்க வனம், பூமியின் வட துருவத்திலிருந்து தென் பகுதிக்கு, குளிர்காலத்தில் பறந்து வரும் பறவைக் கூட்டத்தின் பயணம் பற்றி விவரிக்கும் தொடர்கதை.

இடம்பெயர் பறவைகளின் வாழ்க்கையை, அறிவியல் கருத்துக்களோடு சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன்.

வாருங்கள்! நாமும் சொர்க்கவனம் சென்று பார்ப்போம்!

Continue reading “சொர்க்க வனம் – தொடர்கதை”

சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

ஐந்து மாதங்களுக்கு பிறகு,

இருன்டினிடேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரக்கன்று முளைத்து வளர்ந்தது.

இருன்டினிடேவின் உடல் உரமாகி, சொர்க்கவனத்துப் பறவைகளால், விதைக்கப்பட்ட பற்பல விதைகள் ஒன்றாகி, முளைத்து வளர்ந்து வரும் அந்த மரத்திற்கு ‘இருன்டினிடே மரம்‘ என சொர்க்க வனத்துப் பறவைகள் பெயர் சூட்டியிருந்தன.

Continue reading “சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது”

சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

கொக்கு தலைவனும் இருன்டினிடேவும் கனலியின் கூட்டை வந்தடைந்தன. கூட்டில் கனலி இல்லை. ‘எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்தப்படியே அப்பகுதியை சுற்றி வந்தது கொக்கு தலைவன். இருன்டினிடேவும் ஆவலோடு காத்திருந்தது.

அப்பொழுது அங்கு வந்த அணில், “யார தேடுறீங்க?” என்று கொக்கைப் பார்த்து கேட்டது.

“இங்க கனலிய தேடி வந்தோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?” என்று கொக்கு கேட்டது.

Continue reading “சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்”

சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

மறுநாள்.அதிகாலை நேரம்.இன்னமும் விடியவில்லை.மிதமான அளவில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது.

கனலியின் நண்பனான கொக்கு கூட்டத்தின் தலைவனுக்கு உறக்கம் கலைந்தது. கூட்டில் இருந்து நகர்ந்து மரத்தின் உச்சிக்கிளைக்கு வந்து நின்று கொண்டு, ஆகாயத்தை உற்று நோக்கியது. கருப்பு வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் விரவிக் கிடந்தன.

குளிர்ந்த சூழலில் இரவு வானத்தை காண்பதிலே அது மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வாக்டெய்ல் குருவியை அதன் கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று கனலி சொன்னது அதன் நினைவிற்கு வந்து.

Continue reading “சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது”

சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி

வாக்டெய்லின் மகிழ்ச்சி

சில நாட்களுக்கு பிறகு,

தனியாக மரக்கிளையில் அமர்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

அப்பொழுது அங்கு ஆடலரசு வந்தது.

“வாக்டெய்ல், என்ன பண்ற?”

“குறிப்பு எழுதிக்கிட்டு இருகேன் நண்பா”

Continue reading “சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி”