இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து

இயற்கை வலிநிவாரணிகள்

வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.

நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.

Continue reading “இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து”

தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி

சித்தன்.ஓஆர்ஜி

பக்தி, யோகம், ஞானம், தமிழ், சித்தர் இலக்கியம் ஆகிய அனைத்தும் கூட்டுக் கலவையாக  நிறைந்திருக்கும் ஓர் அற்புதமான இணையதளம் இதுவாகும்.

மிகச்சிறந்த கலைப் பொக்கிஷமாக, அறிவுப் பொக்கிஷமாகத் தேடுகிற எல்லாவற்றையும் தருகிற களஞ்சியமாக விளங்குகின்ற ஒரு இணைய தளம் தான் ”சித்தன்” எனும் இந்த இணையதளம் ஆகும்.

Continue reading “தமிழ் பொக்கிசம் – சித்தன்.ஓஆர்ஜி”

புதினா என்னும் மருத்துவ மூலிகை

புதினா

புதினா என்னும் மருத்துவ மூலிகை பற்றி எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். பிரியாணி, சால்னா உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களின் அற்புதமான மணம் மற்றும் சுவைக்கு முக்கிய காரணம் புதினாவாகும்.

அதனால்தான் உலகெங்கும் உள்ள சமையல்காரர்களுக்குப் பிடித்த சமையல் பொருட்களில் ஒன்றாக இது உள்ளது.

உலகெங்கும் சுமார் 30 புதினா இனங்களில் 500 வகைகள் உள்ளன. இதனுடைய அறிவியல் பெயர் மெந்தா ஸ்பிகேட்டா என்பதாகும். இது லாமியாசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. Continue reading “புதினா என்னும் மருத்துவ மூலிகை”

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா என்ற இது அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்பாடல் இன்றைய காலகட்டத்திற்கும் உடல்நலத்தைப் பாதுகாக்க‌ பொருந்துவதாக உள்ளது. இத்னைக் குறித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாருங்கள் பாடலைக் காண்போம். Continue reading “தமிழ் மருத்துவ அறிவுரைப்பா”

மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வணக்கம்!

இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏன் தெரியுமா? Continue reading “மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?”