கொத்துமல்லி – மருத்துவ பயன்கள்.

கொத்துமல்லி

கொத்துமல்லி கார்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பசித்தூண்டியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொத்துமல்லி இலை, கீரையாகவும் பயன்படுகின்றது. இதனால் பித்தக் காய்ச்சலும் பித்த மயக்கமும் நீங்கும். Continue reading “கொத்துமல்லி – மருத்துவ பயன்கள்.”

கற்பூரவல்லி – மருத்துவ பயன்கள்

கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் சில‌ பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன்கூடுகளைக் காணமுடியும்.
தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இந்தச் செடியைத் தொட்டியிலும் வளர்த்துப் பயன்பெறலாம். Continue reading “கற்பூரவல்லி – மருத்துவ பயன்கள்”

கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்

கறிவேப்பிலை

கறிவேம்பு இலை என்பதையே கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என நாம் குறிப்பிடுகிறோம். கறிவேப்பிலை சமையலில் மணமூட்டும் முக்கியமான இலையாகும்.

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும். Continue reading “கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்”

கசகசா மருத்துவ பயன்கள்

கசகசா

கசகசா மருத்துவ பயன்கள் பல கொண்டது.  இது இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். Continue reading “கசகசா மருத்துவ பயன்கள்”

ஓமம் – மருத்துவ பயன்கள்

ஓமம்

ஓமம் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும்; அழுகலகற்றும்; வெப்பம் உண்டாக்கும்; உடலை பலமாக்கும்; உமிழ் நீரைப் பெருக்கும்

ஓமத்தை உணவில் சேர்த்துக் கொண்டு வர அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீதபேதி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். Continue reading “ஓமம் – மருத்துவ பயன்கள்”