அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

அழிந்து கொண்டே போகிறது என் உலகம்

நான் நெல் விதைத்த விளைநிலம் எல்லாம்

இன்று வேலி அமைத்து வீடுகட்ட காத்திருக்கிறது

நான் குதித்து விளையாடிய குளங்களும் கிணறுகளும்

வற்றிப் போய் வானத்திடம் மழைக்காக வாதாடுகின்றன‌

Continue reading “அழிந்து கொண்டே போகிறது என் உலகம்”

புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு

விவசாயி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு

தீமை விளைவிக்கும் – 58% (11 வாக்குகள்)

நன்மை தரும் – 42% (8 வாக்குகள்)

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.
Continue reading “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”

விவசாயம் – கவிதை

விவசாயம்

கையிலே தூக்குவாளி

தலையிலே சோத்துக்கூடை

நைந்து கிழிந்த சேலை

நாணலாக ஆடி வரும் தண்டட்டி

பல்லாங்குழி பொக்கவாய் பாட்டி

பரிவுடனே வந்திடுவாள்! Continue reading “விவசாயம் – கவிதை”

சத்தை ஏர் மூக்கையா – கதை

சத்தை ஏர் முத்தையா

சத்தை ஏர் மூக்கையா ஓர் ஏழை விவசாயக் கூலியின் கதை.

நமது கிராமங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாயை விரித்தாற்போல் எங்கும் பசுமையாக இருந்த பலவிளைநிலங்கள், இன்றைக்கு தரிசுக் காடாகவும், வீட்டு மனைகளாகவும் காட்சி தருகின்றன.

அப்படியாகத்தான் தஞ்சைத் தரணியின் சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலத்தின் போக்கினால், மாறுபட்டு முற்றிலுமாக கலையிழந்து நிற்கிறது.

காலத்தின் மாற்றம், விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமை பீத்திக் கொள்ளும் சனங்களுக்கு மத்தியில் அகப்பட்டும், உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி சத்தை ஏர் மூக்கையா என்ற‌ ஒருவரோடு சேர்ந்துதான் நாம் சிறிது நேரம் பயணிக்கப் போகிறோம்.

“ஏங்க; உங்களே! உங்களே!

கெவர்மண்டு ஆபிசர் வந்திருக்காவோ

போயிட்டு என்னானு பாருங்க”

என்று பொன்னம்மாள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கணவரான சத்தை ஏர் மூக்கையாவை உசுப்பினாள்.

“வாங்க சாமி, கும்பிடுரோனுங்க”

Continue reading “சத்தை ஏர் மூக்கையா – கதை”