விவசாயி மாப்பிள்ளை

பெண் கிடைக்காத ஒரு ஏழை விவசாயி புலம்புவதைக் கேளுங்கள்!

 

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது!

விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல!

எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல!

 

திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்!

மணமேடைக்கு மண்கரை படிந்த என்னை வேண்டாம் என்றார்கள்!

 

எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம் திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்!

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது